Enable Javscript for better performance
செங்கோட்டை அரசு நூலகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    செங்கோட்டை அரசு நூலகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம்

    By DIN  |   Published on : 28th March 2019 06:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செங்கோட்டை அரசு நூலகத்தில் வாசகர்  வட்டம், தேர்தல் பணிக்குழு சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    வாசகர் வட்டத் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். உதவி வாக்காளர் பதிவு அலுவலர் (வட்டாட்சியர்) வெங்கடாசலம், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர்  மரகதநாதன்,  தேர்தல் துணை வட்டாட்சியர்கள் ஞானசேகரன், சரவணன், துணை வேளாண் அலுவவலர் சேக், ரோட்டரி கிளப் ஆப் சென்டரல் தலைவர் மாரியப்பன் முன்னிலை வகித்தனர்.  
    தென்காசி மக்களவைத் தொகுதி தேர்தல் மேற்பார்வையாளர் ராஜசேகரன் சிறப்புரையாற்றினார்.  வாக்குச் சீட்டு ஒப்புகை இயந்திரம் குறித்து வட்டாட்சியர் வெங்கடாசலம் செயல் விளக்கமளித்தார்.
    100-க்கும் மேற்பட்டோருக்கு வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் மாதிரி வாக்குப் பதிவு செய்து காண்பிக்கப்பட்டது.  நூலகர் ராமசாமி நன்றி கூறினார். ஏற்பாடுகளை தேர்தல் பணிக் குழு சார்பில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஆறுமுகச்சாமி, முத்துராஜ், சொக்கலிங்கம்,  நாகராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai