Enable Javscript for better performance
நெல்லையில் திமுகவினர் வாக்கு சேகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    திருநெல்வேலி நகரத்தில் திமுகவினர் புதன்கிழமை வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.
    மக்களவைத்தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் சா.ஞான திரவியத்தை  ஆதரித்து வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கட்சியின் மத்திய மாவட்டச் செயலர் மு. அப்துல் வஹாப் தலைமையில், திருநெல்வேலி நகரத்தில் உள்ள ரத வீதிகளில் பொதுமக்கள், வணிகர்களிடம் வாக்கு சேகரித்தனர். 
    மேல ரத வீதியில் சந்திப் பிள்ளையார் கோயில் முனையில் இருந்து வாக்கு சேகரிப்பினை தொடங்கிய திமுகவினர், துண்டு பிரசுரங்கள் கொடுத்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள், கடைக்காரர்களிடம் வாக்குகள் சேகரித்தனர். இதில், திருநெல்வேலி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எல்.எஸ். லட்சுமணன், கட்சியின் பகுதிச் செயலர் கோபி, மத்திய மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பொன்னையா பாண்டியன், முன்னாள் பகுதிச் செயலர் உலகநாதன் உள்பட பலர்  பங்கேற்றனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai