Enable Javscript for better performance
நெல்லையில் நாளை கனிமொழி பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    திருநெல்வேலி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் சா.ஞானதிரவியத்தை ஆதரித்து  திருநெல்வேலியில் திமுக மகளிர் அணி செயலர் கனிமொழி வெள்ளிக்கிழமை (மார்ச் 29) பிரசாரம் செய்கிறார்.
    இதுதொடர்பாக திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலர் இரா. ஆவுடையப்பன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
    திருநெல்வேலி மக்களவைத்தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக சார்பில் சா.ஞானதிரவியம்  போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, திமுக மகளிர் அணி செயலர் கனிமொழி திருநெல்வேலி மாவட்டத்தில்  வெள்ளிக்கிழமை (மார்ச் 29) சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்கிறார்.
    மாலை 6 மணிக்கு ஆலங்குளத்தில் பிரசாரம் செய்யும் அவர், இரவு 8 மணிக்கு பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி அருகே நடைபெறும் பிரசாரப் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசுகிறார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai