Enable Javscript for better performance
நெல்லையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி- Dinamani

சுடச்சுட

    

    நெல்லையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி

    By DIN  |   Published on : 28th March 2019 06:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி ராமையன்பட்டி கிட்டங்கியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
    தமிழகத்தில் ஏப். 18 இல் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுதாக்கல் இம்மாதம் 19 இல் 26 ஆம் தேதி வரை நடைபெற்றது. புதன்கிழமை வேட்புமனு பரிசீலனை முடிவடைந்தது. வேட்பு மனுக்களைத் திரும்பப்பெற  வெள்ளிக்கிழமை (மார்ச் 29) கடைசி நாளாகும்.  மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.
    தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் வேட்பாளர் செலவினங்கள் கண்காணிப்புப் பணிகள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட  10 ஆம் தேதி முதல் அமலில் உள்ளன. திருநெல்வேலி மாவட்டத்தில் பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகள் ஏதும் இல்லை.
    திருநெல்வேலி மாவட்டத்தில்  தென்காசி (தனி) (தொகுதி எண் 37), திருநெல்வேலி (38) ஆகிய இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இம் மாவட்டத்தில் கடந்த ஜன. 31 ஆம் தேதி நிலவரப்படி 12 லட்சத்து 48 ஆயிரத்து 485 ஆண் வாக்காளர்களும், 12 லட்சத்து 89 ஆயிரத்து 108 பெண் வாக்காளர்களும், 90 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 25 லட்சத்து 37 ஆயிரத்து 683 வாக்காளர்கள் உள்ளனர்.  
    வாக்குச்சாவடி மையங்கள்: இம் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 979  வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில், 68 வாக்குச்சாவடி மையங்களை இடமாற்றம் செய்யவும், 29 வாக்குச்சாவடிகளின் பெயர்களை மாற்றம் செய்யவும் மத்திய தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளில் குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஒப்புகை சீட்டுடன் கூடிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
    வாக்குப்பதிவு இயந்திரங்கள்: இம்மாவட்டத்தில்வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்புவதற்காக ராமையன்பட்டியில் உள்ள கிட்டங்கியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை தேர்தல் பிரிவு அலுவலர் கண்காணிப்பில் கல்லூரி மாணவர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் ஆகியோரைக் கொண்டு  சுத்தப்படுத்தினர். பின்னர், அதில் எந்தெந்த இயந்திரங்களை எந்த பகுதிக்கு அனுப்ப வேண்டும் என்பது குறித்து அதில் எண்களை பதிவிட்டு சரிபார்க்கும் பணி நடைபெற்றது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai