Enable Javscript for better performance
மாவட்ட அறிவியல் மையத்தில் கோடைக்கால பயிற்சி வகுப்புகள் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    மாவட்ட அறிவியல் மையத்தில் கோடைக்கால பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

    By DIN  |   Published on : 28th March 2019 06:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் கோடைக்கால சிறப்பு பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்குகிறது.
    இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட அறிவியல் அலுவலர் எஸ்.எம்.குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
    பள்ளி மாணவர்களின் கோடை விடுமுறையையொட்டி 5 முதல் பிளஸ்-1 வரையிலான மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் 15 முதல் 26 ஆம் தேதி வரை மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி காலை 10.30 முதல் நண்பகல் 12.30 மணி வரை கலை மற்றும் கைவினை தயாரிப்பு பயிற்சி 5 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும்,  பிற்பகல் 2 முதல் 4 மணி வரை மின்னனுவியல் பயிற்சி 8 முதல் பிளஸ்-1 வரையிலான மாணவர்களுக்கும், மாலை 4 முதல் 6 மணி வரை 8 முதல் பிளஸ்-1 வரையிலான மாணவர்களுக்கு வானியல் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. 
     இதற்கு ஒரு மாணவருக்கு ரூ.500 கட்டணமாகும். 
    பயிற்சியில் சேர கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தை நேரில் அணுகலாம்.  
    0462-2500256 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai