Enable Javscript for better performance
வாசுதேவநல்லூர் அருகே விபத்து: மீன் வியாபாரி சாவு- Dinamani

சுடச்சுட

    

    வாசுதேவநல்லூர் அருகே இரு பைக்குகள்   மோதிக்கொண்டதில் காயமடைந்த மீன் வியாபாரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். 
     வாசுதேவநல்லூர் காமராஜர் தெருவைச் சேர்ந்த மாடசாமி மகன் சுப்பிரமணியன் என்ற குமார்(32).  மீன் வியாபாரி. இவர், புதன்கிழமை ஊருக்கு வடக்கேயுள்ள மாரியம்மன் கோயில் அருகே வியாபார நிமித்தமாக பைக்கில் சென்றபோது, எதிரில் வந்த திருமலாபுரம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த மியான்மரைக்காயர் மகன் சிக்கந்தர் பாதுஷாவின்(35) பைக்கும் மோதிக்கொண்டதாம்.  
    இதில் காயமடைந்த இருவரும் சிவகிரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் சுப்பிரமணியன் இறந்தார்.  சிக்கந்தர்பாதுஷா மேல்சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இதுகுறித்து, வாசுதேவநல்லூர் காவல் ஆய்வாளர் கலா வழக்குப் பதிந்து, விசாரித்து வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai