Enable Javscript for better performance
வீரவநல்லூரில் அஞ்சல் கணக்கு சிறப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    வீரவநல்லூரில் அஞ்சல் துறையின் செல்வமகள் சேமிப்புத் திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
    சிறப்பு முகாமுக்கு அல்பா அறகட்டளை செயலர் முகம்மது அலி ஜின்னா தலைமை வகித்தார்.  அல்பா கல்வி அறக்கட்டளை சார்பில் 100 ஏழை பெண் குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கான சேமிப்புத் திட்டத்திற்கான முதல் தவணை ரூ. 25 ஆயிரத்தை அறக்கட்டளைத் தலைவர் முகம்மது இப்ராஹிம் வழங்கினார்.  
    இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் சாந்தகுமார்,  பயனாளிகளுக்கு அஞ்சல் புத்தகத்தை வழங்கினார். அம்பாசமுத்திரம் அஞ்சல் உப கோட்டக் கண்காணிப்பாளர் பரமேஸ்வரன், வீரவநல்லூர் முன்னாள் பேரூராட்சித் தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் பெற்றோர்கள்  கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai