Enable Javscript for better performance
40 தொகுதிகளிலும் வெல்வதுதான் ஜெயலிலதாவுக்கு செலுத்தும் மரியாதை:  மத்திய அமைச்சர் பியூஷ்கோயல்- Dinamani

சுடச்சுட

    

    40 தொகுதிகளிலும் வெல்வதுதான் ஜெயலிலதாவுக்கு செலுத்தும் மரியாதை:  மத்திய அமைச்சர் பியூஷ்கோயல்

    By DIN  |   Published on : 28th March 2019 06:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது மறைந்த  ஜெயலலிதாவுக்கு நாம் செலுத்தும் மரியாதை என்றார் மத்திய ரயில்வே மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர் வி.பியூஷ்கோயல்.
    அதிமுக, பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சியின் சார்பில் அக்கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். தென்காசி-குற்றாலம் சாலையில் யானைப்பாலம் அருகே தேர்தல் அலுவலக  திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
    இந்நிகழ்ச்சிக்கு, எஸ். செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். அமைச்சர் வி.எம். ராஜலெட்சுமி,  அதிமுக மாவட்டப் பொருளாளர் சண்முகசுந்தரம், தமாகா மாவட்டத் தலைவர் அய்யாத்துரை, பாஜக தொகுதி பொறுப்பாளர் எஸ்.வி. அன்புராஜ், மாவட்டத் தலைவர் குமரேசசீனிவாசன், பாமக மாநிலதுணைத் தலைவர் சேதுஹரிகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    தேர்தல்அலுவலகத்தை மத்திய ரயில்வே மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர் வி. பியூஷ்கோயல் திறந்து வைத்து  பேசியது: இந்தியாவிற்கு  திறமையான, துணிச்சலான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தலைமை அவசியம். அது பிரதமர் நரேந்திரமோடியால் மட்டுமே முடியும். எனவே, மீண்டும் மோடி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும்.
    மத்திய மாநில அரசுகள் இணைந்து இரட்டை என்ஜின்போல் தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச்  செல்கின்றன. தமிழகத்தில் ஏழை எளிய மக்கள், விவசாயிகளுக்கு ஆதரவாக ஜெயலலிதா செயல்பட்டார். தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியை வெற்றிப் பெற செய்வதுதான் ஜெயலலிதாவுக்கு நாம் செலுத்தும்  அஞ்சலி.
    இத்தொகுதியில் போட்டியிடும் கிருஷ்ணசாமி சமூக சிந்தனையாளர், 24 மணி நேரமும் மக்களின் வளர்ச்சிக்காக சிந்திக்கக் கூடியவர். குற்றாலம் அருவியை புகழ்பெற்ற சுற்றுலாத் தலாமாக உயர்த்தவும், தொகுதிக்கு அதிகளவில் திட்டங்களை  பெற்று தரவும் கிருஷ்ணசாமியால் முடியும். அவரை வெற்றிபெறச் செய்ய வேண்டும்  என்றார் அவர்.
    நிகழ்ச்சியில், அதிமுக நிர்வாகிகள் எஸ். கிருஷ்ணமுரளி, சங்கரபாண்டியன், வசந்தம்முத்துபாண்டியன், செல்லப்பன், சுசீகரன், நகரச் செயலர்கள் கார்த்திக்குமார், மயில்வேலன், முன்னாள் மாவட்டச் செயலர் குமார்பாண்டியன், புதிய தமிழகம் கட்சியின் மாவட்டச் செயலர் இன்பராஜ், இலஞ்சி மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
    பிரசாரம்: பின்னர், டாக்டர் கிருண்சாணியை ஆதரித்து மத்திய அமைச்சர் வி. பியூஷ்கோயல் தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் பிரசாரம் செய்தார். அப்போது, அமைச்சர் வி.எம். ராஜலெட்சுமி, சட்டப்பேரவை உறுப்பினர் செல்வமோகன்தாஸ்பாண்டியன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணைச்செயலர் முகிலன், நகரச் செயலர் சுடலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai