Enable Javscript for better performance
தென்காசி கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    தென்காசி கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம்

    By DIN  |   Published On : 29th March 2019 08:30 AM  |   Last Updated : 29th March 2019 08:30 AM  |  அ+அ அ-  |  

    தென்காசி கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    கல்லூரிகளின் தாளாளர் ந.மணிமாறன் தலைமை வகித்தார்.கல்லூரி முதல்வர் கயற்கண்ணி முன்னிலை வகித்தார். விழிப்புணர்வு முகாமை முன்னிட்டு கல்லூரி நூலகக் குழு, நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும்  குடிமக்கள் நுகர்வோர் குழுமம் சார்பில், எனது வாக்கு எனது உரிமை என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடைபெற்றது. மாணவ, மாணவிகள் முத்துலெட்சுமி, சுரேஷ், திவ்யா ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பெற்றனர்.
    நிகழ்ச்சியில் மாவட்ட உதவி ஆட்சியர் சுகபுத்ரா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார். மேலும், வாக்குப்பதிவு இயந்திரம், யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் கண்டறியும் இயந்திர செயல்பாடு குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
    நிகழ்ச்சியில்  வட்டாட்சியர் தங்கராஜ், மாவட்ட மைய தலைமை நூலகர் முத்துகிருஷ்ணன், மாவட்ட தேர்தல் வரவு செலவு கணக்கீட்டாளர் கபில்மண்டேலா ஆகியோர் கலந்துகொண்டனர்.
    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவிப் பேராசிரியர்கள் சுப்பிரமணியன், பன்னீர்செல்வம், முத்துகுமார், சண்முகஆனந்தி ஆகியோர் செய்திருந்தனர்.
    சங்கீதமாலா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் அமுதசெல்வன் வரவேற்றார். பாண்டிலெட்சுமி நன்றி கூறினார்.
    இலஞ்சி பேரூராட்சியில்... இலஞ்சி பேரூராட்சியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பேரூராட்சி அலுவலகத்திலிருந்து வழங்கப்படும் அனைத்து ரசீதுகளிலும் விழிப்புணர்வு வாசகம் பொறிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
    பணத்திற்கு இல்லை வாக்கு, எனது வாக்கு எனது பெருமை, 18-04-2019 அன்று தவறாமல் வாக்களிப்போம் என்ற வாசகம் பொறிக்கப்பட்ட ரசீதுகள் வழங்கப்படுகின்றன. வரி செலுத்தியவர்களுக்கு விழிப்புணர்வு வாசகம் அடங்கிய ரசீதை பேரூராட்சி செயல் அலுவலர் அ. நிலோபமுத்திரை வழங்கினார். நிகழ்ச்சியில் இளநிலை உதவியாளர் கோ.சங்கரசுப்பிரமணியன், சுகாதார மேற்பார்வையாளர் குளத்தூரான் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp