ஸ்ரீமங்கை வித்யாஸ்ரம் சார்பில் தூத்துக்குடியில் சி.ஏ., சி.எம்.ஏ. இலவச அறிமுக வகுப்பு
By DIN | Published On : 30th March 2019 07:39 AM | Last Updated : 30th March 2019 07:39 AM | அ+அ அ- |

ஸ்ரீமங்கை வித்யாஸ்ரம் சார்பில் தூத்துக்குடி எஸ்.ஏ.வி. மேல்நிலைப் பள்ளியில் வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 31) காலை 10 மணிக்கு சி.ஏ. மற்றும் சி.எம்.ஏ. படிப்பிற்கான இலவச அறிமுக வகுப்பு நடைபெறுகிறது.
பன்னிரண்டாம் வகுப்பில் எந்தப் பிரிவில் படித்தாலும், சி.ஏ. மற்றும் சி.எம்.ஏ. படிப்புகளில் சேரலாம். இறுதியாண்டு தேர்வு எழுதிய கல்லூரி மாணவர்களும் இப்படிப்புகளில் சேரலாம். எனவே, இலவச அறிமுக வகுப்பில் மாணவர்கள் தங்களின் பெற்றோர்களுடன் கலந்து கொண்டு சி.ஏ. மற்றும் சி.எம்.ஏ. படிப்பு பற்றிய தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என ஸ்ரீமங்கை வித்யாஸ்ரம் நிர்வாகி க.கனகராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...