முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
ஆவுடையாள்புரம் ஸ்ரீ முத்தாரம்மன் கோயிலில் அம்மனுக்கு ஆறாட்டு
By DIN | Published On : 15th May 2019 09:14 AM | Last Updated : 15th May 2019 09:14 AM | அ+அ அ- |

ராதாபுரம் ஒன்றியம் ஆவுடையாள்புரம் ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் கொடை விழாவையொட்டி, அம்மனுக்கு ஆறாட்டு நடைபெற்றது.
இக்கோயில் கொடை விழா கடந்த திங்கள்கிழமை கும்பாபிஷேகத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சுமங்கலி பூஜையும், மதியம் அம்மனுக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்றன. மாலை 4 மணிக்கு ஆறாட்டு நிகழ்ச்சி தொடங்கியது.
தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பூஞ்சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி, கடற்கரை நோக்கி பவனி நடைபெற்றது.
சப்பரத்தின் முன்னே பல்வேறு அம்மன் கோயில்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 11 புனித நீர் கலசங்கள் எடுத்துச் செல்லப்பட்டன. சப்பரத்தின் பின்னால் பால், இளநீர், குங்குமம், சந்தனம் கரைசல் வைக்கப்பட்ட 401 கும்பக் கலசங்களை பெண்கள் எடுத்துச் சென்றனர்.
தொடர்ந்து கடலில் கால் நனைத்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் அம்மன் சிலையை எழுந்தருளச் செய்து, கும்பக் கலசங்களை வைத்து கணபதி ஹோமம் உள்ளிட்ட ஹோம பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார பூஜை நடைபெற்றது. ஏற்பாடுகளை எஸ்.முத்துவேல் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.