Enable Javscript for better performance
பாளை.யில் கோடைகால இந்து சமயபண்பாட்டு பயிற்சி வகுப்பு நிறைவு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி

    பாளை.யில் கோடைகால இந்து சமய பண்பாட்டு பயிற்சி வகுப்பு நிறைவு

    By DIN  |   Published On : 15th May 2019 09:16 AM  |   Last Updated : 15th May 2019 09:16 AM  |  அ+அ அ-  |  

    பாளையங்கோட்டையில் 10 நாள்கள் நடைபெற்ற கோடைகால இந்து சமய பண்பாட்டு பயிற்சி வகுப்பு நிறைவடைந்தது.
    தென் தமிழ்நாடு சேவாபாரதி அமைப்பு, தியாகராஜநகர் விக்ன விநாயகர் திருக்கோயில் அறநெறிச் சங்கம்  சார்பில் சிறுவர், சிறுமியருக்கான கோடைகால இந்து சமய பண்பாட்டு பயிற்சி வகுப்புகள் விக்ன விநாயகர் கோயில் கலையரங்கில் நடைபெற்றது.  இதில் 33 சிறுவர், சிறுமியர் கலந்துகொண்டனர். 10 நாள்களும் கவிஞர் பொன்.வேலுமயில் பயிற்சியளித்தார். 
    பயிற்சி நிறைவு விழாவில் ரவிபிரீத்தா, பா.ஹச்சிதா ஆகியோர் இறைவணக்கம் பாடினர். விக்னவிநாயகர் அறநெறிச்சங்கத் தலைவர் வே.வீரபத்திரன் தலைமை வகித்தார். சேவா பாரதி அமைப்பின் ராம்பாபு முன்னிலை வகித்தார். அருணாசலம் வரவேற்றார். 
    தொடர்ந்து நடைபெற்ற கற்றதும், பெற்றதும் நிகழ்ச்சியில், பயிற்சியில் பங்கேற்ற சிறுவர், சிறுமியர்கள் தாம் கற்ற துதிப்பாடல்கள், திருமுறை விண்ணப்பம், திருக்குறள், தினசரி பின்பற்ற வேண்டிய நல்ல பழக்கங்கள், நமச்சிவாய மந்திரம் உள்ளிட்டவற்றை கூறினர்.
    பயிற்சி பெற்ற சிறுவர், சிறுமிகளுக்கு ராம்பாபு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். கவிஞர் பொன்.வேலுமயில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். விக்ன விநாயகர் அறநெறிச் சங்க பொருளாளர் எஸ்.மாரியப்பன் நன்றி கூறினார்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp