முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
மறைந்த வழக்குரைஞர்கள் குடும்பத்துக்கு சேமநல நிதி அளிப்பு
By DIN | Published On : 15th May 2019 09:19 AM | Last Updated : 15th May 2019 09:19 AM | அ+அ அ- |

சிவகிரி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் பணிபுரிந்து மறைந்த வழக்குரைஞர்கள் குடும்பத்துக்கு சேமநல நிதி தலா ரூ. 50 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.
சிவகிரி வழக்குரைஞர்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ம. பரமசிவன் தலைமை வகித்து, மறைந்த வழக்குரைஞர்கள் புளியங்குடி எம். ஜோதிமணி மனைவி ஜெயந்தி, வாசுதேவநல்லூர் சிவக்குமார் மனைவி வசந்தி ஆகியோரிடம் பார் கவுன்சில் ஆ"ஃ"ப் இந்தியா சார்பில் வழங்கப்படும் சேமநல நிதியான தலா ரூ. 50 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார். வழக்குரைஞர்கள் சின்னத்தம்பி, சங்கை கணேசன், ராஜேந்திர பூபதி, சரவணன், துரைப்பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.