Enable Javscript for better performance
வீட்டுமனைகளுக்காக தரிசாக்கப்படும் நிலங்கள்:நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி

    வீட்டுமனைகளுக்காக தரிசாக்கப்படும் நிலங்கள்: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

    By DIN  |   Published On : 15th May 2019 09:16 AM  |   Last Updated : 15th May 2019 09:16 AM  |  அ+அ அ-  |  

    திருநெல்வேலி மாவட்டத்தில் பாசன வசதி இருந்தும் சில பகுதிகளில் விளைநிலங்கள் தரிசாக போடப்பட்டு வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இதனை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரவருணி மற்றும் சிற்றாறு வடிநில கோட்டங்களின் கீழ் விவசாயம் நடைபெற்று வருகிறது. நெல், வாழை, கரும்பு, உளுந்து, பாசிப்பயறு, சிறுகிழங்கு, பல்லாரி, தக்காளி, கத்தரி, வெண்டை உள்ளிட்டவையும் மலர் சாகுபடியும் நடைபெற்று வருகின்றன. தாமிரவருணி ஆற்று நீரை எடுத்துச் செல்லும் வகையில் வடக்கு மற்றும் தெற்கு கோடை மேலழகியான் கால்வாய்கள், நதியுன்னி, கன்னடியன், கோடகன், திருநெல்வேலி கால்வாய், பாளையங்கால்வாய் என 7 பிரதான கால்வாய்கள் உள்ளன.
    இம் மாவட்டத்திலும் விவசாயத்தை நம்பியுள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. பருவமழையின்மை, தண்ணீர்த் தட்டுப்பாடு, இயற்கைச் சீற்றம், விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறை, விளைபொருள்களுக்கு கட்டுப்படியான விலையின்மை உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் விவசாயம் நலிவடைந்து வருகிறது. பட்டதாரிகள் வேளாண்மையில் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்த முன்வராததும் முக்கிய காரணமாகும்.
    இதற்கிடையே, மனை வணிக நிறுவனங்கள் தண்ணீர் வளத்தைக் கருத்தில்கொண்டு விளைநிலங்களை வீட்டுமனைகளாக்க அதிக முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். இதற்காக பாசன வசதி உள்ள வயல்களையும் தரிசாக போடும் அவல நிலை தொடர்ந்து வருகிறது. 3 ஆண்டுகள் வரை தரிசாக போடும் நிலங்களை வருவாய்த் துறையின் உதவியோடு மனைகளாக மாற்றிவிடுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள். ஊராட்சி, பேரூராட்சிப் பகுதிகளிலாவது குறைந்தபட்ச ஆண்டுகள் தரிசாக கிடக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. மாநகரப் பகுதிகளில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் துளியும் கடைப்பிடிக்கப்படுவதில்லையென விவசாயிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
    இதுகுறித்து விவசாயிகள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியது: பாபநாசம் முதல் புன்னக்காயல் வரை தாமிரவருணி நதியின் கரையோரத்தில் உள்ள வயல்களைக்கூட தரிசாகப் போட்டு வீடுகளைக் கட்டுவது அதிகரித்துள்ளது. மாநகரப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக சாகுபடி நடைபெறும் வயல்களைவிட மனைகளாகியுள்ள வயல்களே அதிகம். 
    இதுதவிர நீதிமன்றங்களின் எச்சரிக்கையை மீறி வயல்களுக்குள் டாஸ்மாக் கடைகளும், மதுக்கூடங்களும் செயல்பட்டு வருவது வேதனையளிப்பதாக உள்ளது. விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்றுவதைத் தடுப்பதற்கான சட்டங்கள் இருந்தாலும் அதிகாரிகள் அமல்படுத்த அக்கறை காட்டுவதில்லை. ஆகவே, விளைநிலங்கள் வீட்டுமனைகளாக்கப்படுவதைத் தடுக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp