சுடச்சுட

    

    இஸ்கான் கோயிலில்  மே 18-இல் ஸ்ரீநரசிம்மர் அவதாரத் திருவிழா

    By DIN  |   Published on : 16th May 2019 09:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள இஸ்கான் கோயிலில்  ஸ்ரீநரசிம்மர் அவதாரத் திருநாள் விழா வரும் சனிக்கிழமை(மே 18) நடைபெறுகிறது.
    இது தொடர்பாக திருநெல்வேலி இஸ்கான் கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:  ஸ்ரீநரசிம்மர் அவதாரத் திருநாள்  சனிக்கிழமை வருகிறது. பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் மிகவும் பிரசித்தி பெற்ற அவதாரங்களில் நரசிம்ம அவதாரமும் ஒன்றாகும். இந்த அவதாரத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர், தனது பக்தன் பிரகலாதனுக்காக, உடனடியாக அவதரித்தார். ஸ்ரீநரசிம்ம அவதாரம், மாலைப் பொழுதில், "பகலும், இரவும் சந்திக்கும் சந்தியாநேரத்தில்' நடந்தது. 
    எனவே நரசிம்ம அவதார தினத்தன்று சந்தியா காலம் வரை விரதம் இருந்து ஸ்ரீநரசிம்மரை வழிபடுவது சிறப்புக்குரியதாகும். இதன்மூலம் ஒருவர் நரசிம்மரின் திருவருளை பெற்று, விக்னங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடலாம். 
       ஸ்ரீநரசிம்மர் அவதாரத் திருநாளான சனிக்கிழமை மாலை 6 மணிக்கு திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள இஸ்கான் கோயிலில்  ஸ்ரீஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளன. இதேபோல் ஹரி நாம யக்ஞம், மஹா அபிஷேகம், நரசிம்ம பிரார்த்தனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.  இவ்விழாவிற்கு தென் தமிழக மண்டலச் செயலர் சங்கதாரி பிரபு தலைமை வகிக்கிறார்.
      மஹா அபிஷேகத்திற்காக ஒன்பது கலசங்களில் புனித நீர் நிரப்பப்பட்டு பூஜிக்கப்படவுள்ளது. இதுதவிர, பால், பழம் உள்ளிட்ட பஞ்சராத்ரிக முறைப்படியான திருமஞ்சனமும் நடைபெறவுள்ளது. அபிஷேகத்தின்போது பகவான் புகழ்பாடுவதற்காக ஹரி நாம பஜனையும், நரசிம்ம அவதார மகிமை பற்றிய சிறப்புரையும் நடைபெறவுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை இஸ்கான் பக்தர்கள் குழு செய்து வருகிறது.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai