Enable Javscript for better performance
எறும்பு பொடி மீது விழுந்த பிஸ்கட்டை தின்ற குழந்தை பலி- Dinamani

சுடச்சுட

    

    பாளையங்கோட்டை அருகே எறும்பு பொடி மீது விழுந்த பிஸ்கட்டை தின்ற குழந்தை உயிரிழந்தது.
    பாளையங்கோட்டை கேடிசி நகரைச் சேர்ந்தவர் மிக்கேல். இவருடைய மகள் அனலியா (2). மிக்கேல் வீட்டில் எறும்புகளைக் கட்டுப்படுத்துவதற்காக எறும்பு பொடி தூவியுள்ளனர். அதன் மீது பிஸ்கட் விழுந்ததாம். அந்த பிஸ்கட்டை எடுத்து தின்ற குழந்தை அனலியா, மயங்கி விழுந்துள்ளார்.  இதையடுத்து அவரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை  சேர்த்தனர். இந்த நிலையில் அனலியா புதன்கிழமை உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai