நெல்லையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி: போக்குவரத்து காவல் உதவி ஆணையர் தொடங்கி வைத்தார்

திருநெல்வேலி மாநகர போக்குவரத்துத் துறை, ஹெச்டிஎஃப்சி வங்கி சார்பில் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து 

திருநெல்வேலி மாநகர போக்குவரத்துத் துறை, ஹெச்டிஎஃப்சி வங்கி சார்பில் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
"டிராபிக் பாடசாலை'  என்ற பெயரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஹெச்டிஎஃப்சி வங்கி நிர்வாகி ஆர்.சிவராமன் தலைமை வகித்தார். திருநெல்வேலி மாநகர போக்குவரத்து காவல் துறை உதவி ஆணையர் எம்.ஆனந்தராஜ் விழிப்புணர்வு நிகழ்ச்சியை கொடியசைத்து தொடங்கி வைத்துப் பேசுகையில், "தினந்தோறும் காலை முதல் இரவு வரை பொதுமக்கள் சாலைகளை பயன்படுத்துகிறார்கள். சாலை விதிகளைக் கடைப்பிடிப்பது மிக முக்கியமானதாகும். சாலை விதிகளை கடைப்பிடிக்க தவறினால், விலை மதிப்புமிக்க உயிரை இழக்க நேரிடும். ஒருவர் உயிரிழந்தால், அவருடைய குடும்பத்தின் நிலை என்னவாகும் என்பதை கற்பனையில்கூட நினைத்துப் பார்க்க முடியாது. 
   ஒவ்வொரு புத்தாண்டின்போதும், விபத்தில்லாத ஆண்டாக அமைய வேண்டும். சாலை விபத்தில் பொன்னான உயிர்கள் பலியாகக் கூடாது என வலியுறுத்துகிறோம். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் ஏராளமானோர் பயனடைவார்கள் என நம்புகிறேன்' என்றார். 
 இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியானது முருகன்குறிச்சி, பாளையங்கோட்டை மார்க்கெட், பாளை மேட்டுத்திடல், புதிய பேருந்து நிலையம், திருநெல்வேலி சந்திப்பு, ரயில் நிலையம், மதுரை ரோடு, தச்சநல்லூர் சிக்னல், திருநெல்வேலி நகரத்தில் உள்ள ஆர்ச், ஸ்ரீபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்றது.
நிகழ்ச்சியின்போது பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு சாலை விதிகளை கடைப்பிடிப்பது,  ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவது,  சிக்னல்களை மதிப்பது, வாகனம் ஓட்டும்போது செல்லிடப்பேசியை தவிர்ப்பது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியின்போது சாலை விதிகளை முறையாக பின்பற்றிய வாகன ஓட்டிகளுக்கு வெகுமதி அளிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com