Enable Javscript for better performance
ஆழ்வார்குறிச்சி அருகே கோயிலில் சாமி சிலை சேதம்: இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    ஆழ்வார்குறிச்சி அருகே கோயிலில் சாமி சிலை சேதம்: இளைஞர் கைது

    By DIN  |   Published on : 17th May 2019 07:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆழ்வார்குறிச்சி அருகே கோயிலில் சாமி சிலையை சேதப்படுத்தியதாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
    ஆழ்வார்குறிச்சி அருகேயுள்ள காசிவிஸ்வநாதபுரம், பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கணபதி (60). இவர் அதே பகுதியில் உள்ள சுடலை கோயிலுக்குச் சென்றாராம். அப்போது அங்கு கருத்தப்பிள்ளையூர் பாரதி காலனியைச் சேர்ந்த குட்டி சாத்தா என்பவரது மகன் ராமலிங்கம் கோயிலிலிருந்த சுடலைமாட சுவாமி சிலையை அரிவாளால் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கேட்டபோது கணபதியை ராமலிங்கம் அவதூறாகப் பேசி, மிரட்டல் விடுத்தாராம்.
    இது தொடர்பாக கணபதி அளித்த புகாரின்பேரில் ஆழ்வார்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர் தினேஷ்குமார் வழக்குப் பதிந்து, ராமலிங்கத்தை கைது செய்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai