சுடச்சுட

    

    சிஐடியூ நெல்லை மாவட்ட 12ஆவது மாநாடு: தென்காசியில் வரவேற்புக் குழு கூட்டம்

    By DIN  |   Published on : 17th May 2019 07:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிஐடியூ திருநெல்வேலி மாவட்ட 12ஆவது மாநாடு வரவேற்புக் குழு கூட்டம் தென்காசியில் புதன்கிழமை நடைபெற்றது.
    வட்டாரத் தலைவர் என். லெனின்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஆர். மோகன், மாவட்டத் தலைவர் எம். வேல்முருகன், மாவட்டப் பொருளாளர் எஸ். வண்ணமுத்து, மாநிலச் செயலர் செண்பகம், நிர்வாகிகள் ஆரியமுல்லை, கிருஷ்ணன், அயூப்கான், ஆர். லெனின், தாணுமூர்த்தி, ரவிசந்திரன்,  நாராயணன், முருகையா, குருசாமி, பச்சையப்பன், மணிகண்டன் ஆகியோர் பேசினர்.
    12ஆவது மாவட்ட மாநாடு குற்றாலத்தில் ஜூலை 13, 14 ஆகிய 2 நாள்கள் நடைபெறுகிறது. வரவேற்புக் குழு மாநாட்டுக்கு தலைவராக கே. மாரியப்பன், செயலராக என். லெனின்குமார், பொருளாளராக கிருஷ்ணன், துணைத் தலைவர்களாக சங்கரி, வன்னியபெருமாள், காந்தி, ராமசாமி, குருசாமி உள்ளிட்ட 20 பேரும், துணைச் செயலர்களாக வள்ளிநாயகம், தங்கம், அயூப்கான், பக்ருதீன்அலி, அய்யப்பன் உள்ளிட்ட  20 பேரும்,  நிர்வாகக் குழு உறுப்பினர்களாக 50 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். நாகரத்தினம் நன்றி கூறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai