Enable Javscript for better performance
செங்கோட்டையில் ஆற்றில் தவறி விழுந்து முதியவர் பலி- Dinamani

சுடச்சுட

    

    செங்கோட்டை ஹரிஹர நதியில் குளிக்கச் சென்ற முதியவர் நீரில் தவறி விழுந்து வியாழக்கிழமை இறந்தார்.
    செங்கோட்டை ஹரிஹர நதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில் செங்கோட்டை போலீஸார் சென்று, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.விசாரணையில், அவர் சென்னையைச் சேர்ந்த பரமசிவம் (65) என்பதும், செங்கோட்டை பெருமாள் கோயில் தெருவில் உள்ள தன் மருமகன் சுடலைமுத்து என்பவர் வீட்டுக்கு 4 நாள்களுக்கு முன்பு வந்ததாகவும், வியாழக்கிழமை அதிகாலை ஹரிஹர நதியில் குளிக்கச் சென்றபோது கால் தவறி நீரில் விழுந்து இறந்ததும் தெரியவந்தது. செங்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai