தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தில்மீட்கப்பட்ட மாணவிக்கு கல்லூரியில் இலவச கல்வி

தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் மூலம் மீட்கப்பட்டு பள்ளிப் படிப்பை முடித்த மாணவி, கல்லூரியில் இலவசமாக படிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் மூலம் மீட்கப்பட்டு பள்ளிப் படிப்பை முடித்த மாணவி, கல்லூரியில் இலவசமாக படிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட செய்தி, மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் மூலம் மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்களுக்காக மாவட்டத்தில் 14 இடங்களில் சிறப்புப் பயிற்சி மையங்கள்  செயல்பட்டு வருகின்றன. இச்சிறப்புப் பயிற்சி மையங்களில் பயிலும் குழந்தைகள் இரண்டு ஆண்டுகள் கல்வியில் ஆர்வமூட்டப்பட்டு,  முறையான பள்ளியில் சேர்க்கப்படுகிறார்கள். இத்திட்டத்தின்  கீழ் இதுவரை 5,596 குழந்தைகள் முறையான பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  5,534 குழந்தைகள் வாழ்க்கைக் கல்வியுடன் தொழிற்கல்வி பயின்று வெளியேறியுள்ளார்கள்.
2012ஆம் ஆண்டு முறையான பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவி பி. ஜெனிபர்,  தற்போது மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்ச்சி பெற்று 488 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இம்மாணவி வறுமையின் காரணமாக மேற்படிப்பை தொடர முடியாத சூழ்நிலையில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷை அணுகினார்.
ஆட்சியரின் ஏற்பாட்டில்,  கல்லூரியில் 4 ஆண்டு ஃபேஷன் டிசைனிங் பட்டப் படிப்பு பயில வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்கான அனுமதிக் கடிதத்தை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் மாணவியிடம் வழங்கினார்.  அப்போது, கல்லூரி முதல்வர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com