முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
கோட்டாட்சியர் அலுவலகத்தில் மே 20இல் ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 18th May 2019 04:57 AM | Last Updated : 18th May 2019 04:57 AM | அ+அ அ- |

வள்ளியூர்-திருச்செந்தூர் சாலை ரயில்வே கிராஸிங் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சாலைப்பணியை உடனே தொடங்குவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
வள்ளியூர்-திருச்செந்தூர் சாலையில் ரயில்வே கிராஸிங் பகுதியில் சுரங்கப் பாதை அமைக்கும் பணியைத் தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறையினர் சாலை அமைக்கும் பணியை தொடராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தினமணியில் வெள்ளிக்கிழமை செய்தி வெளியானது.
இந்நிலையில் இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை (மே 20) சேரன்மகாதேவி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
கூட்டத்துக்கு கோட்டாட்சியர் ஆகாஷ் தலைமை வகிக்கிறார். இதில், ராதாபுரம் வட்டாட்சியர் செல்வன், வள்ளியூர்டி.எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத் மற்றும் நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் பங்கேற்கின்றனர். கூட்டத்தை தொடர்ந்து நிறுத்தப்பட்டுள்ள சாலைப்பணி தொடங்கப்படும் என நெடுஞ்சாலைத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.