Enable Javscript for better performance
தென்காசி திருவள்ளுவர் கழக 92ஆவது திருக்குறள் விழா: நாளை தொடங்கி 4 நாள்கள் நடைபெறுகிறது- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி

    தென்காசி திருவள்ளுவர் கழக 92ஆவது திருக்குறள் விழா: நாளை தொடங்கி 4 நாள்கள் நடைபெறுகிறது

    By DIN  |   Published On : 18th May 2019 04:49 AM  |   Last Updated : 18th May 2019 04:50 AM  |  அ+அ அ-  |  

    தென்காசி திருவள்ளுவர் கழக 92ஆவது திருக்குறள் விழா மே 19ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நான்கு நாள்கள் நடைபெறுகிறது.
    தென்காசி திருவள்ளுவர் கழக அரங்கில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருக்குறள் முற்றோதுதல் வேள்வியுடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் செயல் அலுவலர் ந.யக்ஞ நாராயணன் திருக்குறள் கொடி ஏற்றுகிறார். நிகழ்ச்சிக்கு இல.ச.கசேந்திரன் முன்னிலை வகிக்கிறார். தொடர்ந்து நடைபெறும் தமிழ் மறை முழக்க நகர்வலத்தை தியாகி கி.லட்சுமி காந்தன் பாரதி தொடங்கிவைக்கிறார். இந்நிகழ்ச்சிக்கு குப்பன் முன்னிலை வகிக்கிறார். தொடர்ந்து திருமலையப்பன் திருக்குறள் பண்ணிசை நடைபெறுகிறது.
    தொடர்ந்து நடைபெறும் விழா மங்கலம் நிகழ்ச்சிக்கு அம்பாசமுத்திரம் ஆ.பாலசரஸ்வதி தலைமை வகிக்கிறார். குப்பன் நிகழ்ச்சியை தொடங்கிவைத்துப் பேசுகிறார். முப்பாலில் முகம் காட்டும் சிலர் என்ற தலைப்பில் மா.சங்கிலிரத்தினம், சி.கே.சாமி, பெ.கணேஷ்பாபு, இரா.கிருஷ்ணன், ப.சோ. வேலாயுதம், உமா கல்யாணி, ஆவுடையம்மாள், ர.வ.கணேசன், தெ.க.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பேசுகின்றனர்.
    நிகழ்ச்சியில் கழக துணைத் தலைவர் வே.கணபதி சுப்பிரமணியன் வாழ்த்திப் பேசுகிறார். துணைச் செயலர் ராம தீத்தாரப்பன் வரவேற்கிறார்.
    மாலையில் நடைபெறும் திருக்குறள் பேரவை நிகழ்ச்சிக்கு செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன துணைத் தலைவர் தெ.ஞானசுந்தரம் தலைமை வகிக்கிறார். துரை தம்புராஜ் முன்னிலை வகிக்கிறார். வழக்குரைஞர் க.நட்ராஜ் அறிமுக உரையாற்றுகிறார். கி.லட்சுமிகாந்தன் பாரதி  வாழ்த்திப் பேசுகிறார். சென்னையைச் சேர்ந்த சி.ராஜேந்திரன் தொடங்கிவைத்துப் பேசுகிறார்.
    நிகழ்ச்சியில் மெய்ப்பொருள் என்ற தலைப்பில் ச.சங்கரசரவணன், ஒப்புரவு என்ற தலைப்பில் க.பாலமுருகன், நல்லறம் என்ற தலைப்பில் சு.செந்தில்குமார், இறைமாட்சி என்ற தலைப்பில் தே.ஹெலினா, இணையதளம் -குறள் திறன் என்ற தலைப்பில் சபாஷ் சாணக்யா, சோம.வீரப்பன் ஆகியோர் பேசுகின்றனர். கழகத் தலைவர் கணபதிராமன் வரவேற்கிறார். சுடலைமுத்து நன்றி கூறுகிறார்.
    20ஆம் தேதி கவியரங்கம், உரையரங்கம், சொல்லரங்கம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 21ஆம் தேதி கவிமுற்றம், கருத்தரங்கம், தனி உரை, பட்டிமண்டபம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
    22ஆம் தேதி தனி உரை, மகளிர் அரங்கம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    மாலையில் நடைபெறும் பரிசளிப்பு அரங்கம் நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி ம.தி.தா. இந்து கல்லூரி தமிழ்த் துறை தலைவர் ஆ.செல்லப்பா தலைமை வகிக்கிறார். வட்டார கல்வி அலுவலர் இரா.மாரியப்பன், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை தலைவர் ரவீந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசுகின்றனர். பாரத ஸ்டேட் வங்கி தென்காசி கிளை முதன்மை மேலாளர் இரா.பார்த்தசாரதி, மேலகரம் முத்துநாயகம் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் மு.பரமேசுவரன் ஆகியோர் பரிசுகளை வழங்குகின்றனர். இ.மா.ராமச்சந்திரன், புலவர் செல்வராஜ் ஆகியோர் தனி உரையாற்றுகின்றனர்.
    தொடர்ந்து நடைபெறும் மூவர்அரங்கம் நிகழ்ச்சிக்கு மு.ராமசந்திரன் தலைமை வகிக்கிறார். இந்திரா ஜெயச்சந்திரன், கவிதா ஜவகர் ஆகியோர்  பேசுகின்றனர். எஸ்.எம்.கமால்முகைதீன் வாழ்த்திப் பேசுகிறார். சுந்தர ஆவுடையப்பன் வரவேற்கிறார். வழக்குரைஞர் ந.கனகசபாபதி நன்றி கூறுகிறார்.
    ஏற்பாடுகளை திருவள்ளுவர் கழகத் தலைவர் ச.கணபதிராமன், செயலர் ஆ.சிவராமகிருஷ்ணன் மற்றும் விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp