பாவூர்சத்திரம் முருகன் கோயிலில் இன்று வைகாசி விசாக திருவிழா
By DIN | Published On : 18th May 2019 04:53 AM | Last Updated : 18th May 2019 04:53 AM | அ+அ அ- |

பாவூர்சத்திரம் காமராஜர் நகர் அருள்மிகு வள்ளிதேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை (மே 18) நடைபெறுகிறது.
இதையொட்டி காலை 10.30 மணிக்கு புருஷசூத்த ஜெபம், மூலமந்த்ர ஹோமம், அனைத்து திரவியங்களால் அபிஷேகம் மற்றும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
பிற்பகல் 1 மணிக்கு தீபாராதனை, மாலை 6 மணிக்கு சாயரட்சை, 6.30 மணிக்கு சுவாமி வீதியுலா, 8 மணிக்கு தீபாராதனை ஆகியவை நடைபெறுகின்றன.