மக்களவை தேர்தல் வாக்கும் எண்ணும் பணி: ஆட்சியர் ஆலோசனை
By DIN | Published On : 18th May 2019 04:46 AM | Last Updated : 18th May 2019 04:46 AM | அ+அ அ- |

திருநெல்வேலி, தென்காசி மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமை வகித்து பேசியதாவது: திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் 10 இலட்சத்து 31 ஆயிரத்து 547 வாக்குகளும், தென்காசி மக்களவைத் தொகுதியில் 10 இலட்சத்து 56 ஆயிரத்து 841 வாக்குகளும் பதிவாகியுள்ளன.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை அரசு பொநியியல் கல்லூரியிலும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை குற்றாலம் பராசக்தி கல்லூரியிலும் நடைபெறவுள்ளது.
வாக்கு எண்ணும் பணியில் கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள் என 202 பேரும், நுண் பார்வையாளர்கள் 108 பேரும் ஈடுபடுத்தப்படவுள்ளனர். வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.
வாக்கு எண்ணும் பணியை சரியான முறையில் மேற்கொள்ள போதுமான ஒத்துழைப்பை அனைவரும் வழங்க வேண்டும. மேலும் வாக்கு எண்ணிக்கையின்போது, முகவர்கள், வேட்பாளர்கள், அரசியல் கட்சி பிரதிநிகள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து தெளிவாக தெரிந்துகொண்டு சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்றார்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) கணேஷ்குமார், சாந்தி (தேர்தல்) உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.