நெல்லையில் 103 டிகிரி வெயில்
By DIN | Published On : 20th May 2019 07:04 AM | Last Updated : 20th May 2019 07:04 AM | அ+அ அ- |

திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை 103 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. அனல்காற்று காரணமாக மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வேலூர், திருத்தணி, திருச்சி உள்ளிட்ட பல நகரங்களில் 105 டிகிரி பாரன்ஹீட்டை விட அதிகமாக வெயில் பதிவாகிவருகிறது. பாளையங்கோட்டையிலும் நிகழாண்டில் தொடர்ந்து அதிகபட்ச வெயில் பதிவாகி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை 103 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. முற்பகல் 11 முதல் மாலை 4 மணி வரை அனல் காற்றுவீசியதோடு, சாலைகளில் வெப்பத்தால் கானல்நீரும் உருவானதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். விடுமுறை நாள் என்றாலும் வெயிலின் தாக்கம் காரணமாக திருநெல்வேலி நகரம், சந்திப்பு உள்ளிட்ட ஆள்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன.