Enable Javscript for better performance
மாதிரி பள்ளியாக தேர்வு செய்யப்பட்ட  அம்பாசமுத்திரம் அரசு மகளிர் பள்ளி!- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    மாதிரி பள்ளியாக தேர்வு செய்யப்பட்ட  அம்பாசமுத்திரம் அரசு மகளிர் பள்ளி!

    By கு.அழகியநம்பி  |   Published On : 28th May 2019 08:25 AM  |   Last Updated : 28th May 2019 08:25 AM  |  அ+அ அ-  |  

    அம்பாசமுத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி திருநெல்வேலி மாவட்டத்தின் முதல் மாதிரிப் பள்ளியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளியில் அதிநவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டு பொலிவூட்டப்பட்டு வருகிறது.
    அம்பாசமுத்திரத்தில் அ.வே.றாம.முதலியார் அரசு மகளிர் மேல்நிலைப்  பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் 6 முதல் பிளஸ் 2 வரை பயின்று வருகின்றனர். 1944 இல் ராணி சாகிபாவால் உயர்நிலைப் பள்ளியாக தொடங்கப்பட்ட இப்பள்ளி 
    1966 இல் அரசுப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.  தொடர்ந்து 1980இல் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளி அம்பாசமுத்திரம் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள பெண்கள் கல்வி கற்கக் காரணமாக அமைந்துள்ளது.
    இப்பள்ளி கல்வித் துறையால் திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மாதிரிப் பள்ளியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பள்ளிக்குத் தேவையான அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளும் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.  மாதிரிப் பள்ளியாக அறிவிக்கப்பட்டதையடுத்து 2019-20 ஆம் கல்வியாண்டில் இருந்து மழலையர் வகுப்பு தொடங்கவும் கல்வித் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    இதையடுத்து, மழலையர் பள்ளியில் 39 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். மகளிர் பள்ளியாக இருந்த இப்பள்ளியில் மழலையர் பள்ளியில் இருபால் மாணவர்களும் சேர்க்கப்படுகின்றனர். 
    இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் மேரி மார்கரெட் கூறியது: 1944 இல் தொடங்கப்பட்ட இப்பள்ளி தரம் உயர்த்தப்பட்டுள்ளது.  இப் பள்ளியில் பயின்றவர்கள் சிறந்த பணிகளில் உள்ளனர். 
    பள்ளியில் 1230 மாணவிகள் பயின்று வருகின்றனர். 48 நிரந்தர ஆசிரியர்களும், 3 பகுதி நேர ஆசிரியர்களும், 8 அலுவலகப் பணியாளர்களும் பணியில் உள்ளனர். 
    2018 - 19ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்வில் 98.1 சதவீதமும், பிளஸ் 1 தேர்வில் 97.5 சதவீதமும், 10 ஆம் வகுப்பில் 90.4 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். நூறு சதவிகித தேர்ச்சிக்கு ஆசிரியர்கள் அர்ப்பணிப்போடு பணியாற்றி வருகின்றனர். 
    இந்நிலையில் இப்பள்ளியை திருநெல்வேலி மாவட்டத்தின் முதல் மாதிரிப் பள்ளியாக கல்வித்துறை அறிவித்துள்ளது. 
     நிகழ் கல்வியாண்டில் மழலையர் வகுப்பு தொடங்கப்படுகிறது. மேலும், சீர்மிகு வகுப்பறைகள், கணினி ஆய்வகங்கள், வருகைப் பதிவு, நவீன விளையாட்டு கருவிகள், மழலையர் பள்ளிக்குத் தேவையான கல்வி உபகரணங்கள், விளையாட்டுப் பொருள்கள் போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. பள்ளி வளாகம் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அனைத்து வகுப்பு மாணவிகளுக்கும் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. 
    மாவட்டத்தில் முதல் மாதிரிப் பள்ளியாக அறிவிக்கப்பட்டதால் அம்பாசமுத்திரம் நகரம் பெருமை கொள்கிறது.  தனியார் பள்ளிகளுக்கு இணையாக அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தப் பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளை இப்பள்ளியில் சேர்த்து பயன்பெறலாம் என்றார் அவர்.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp