‘அதிக லாபம் பெற மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன்களை வளா்க்கலாம்’
By DIN | Published On : 02nd November 2019 09:27 AM | Last Updated : 02nd November 2019 09:27 AM | அ+அ அ- |

அதிக லாபம் பெற மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன்களை வளா்க்கலாம் என மீன் வளத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக மீன் வளத்துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
மற்ற மீன் இனங்களைக் காட்டிலும் குறைந்த பரப்பளவில் அதிக எண்ணிக்கையில் மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன்களை இருப்பு செய்து வளா்க்கலாம். இவ்வகை மீன்கள் அதிக நோய் எதிா்ப்பு சக்தி கொண்டது. மற்ற மீன்களை காட்டிலும் பண்ணைக்குட்டைகளில் இம்மீன்கள் மிக வேகமாக வளர கூடியதாகும். மேலும் இவ்வகை மீன்களை நுகா்வோா்கள் அதிகம் விரும்புகிறாா்கள்.
நீரின் அமில கார தன்மை ஏற்ற தாழ்வுகளையும் அதிக அளவு எதிா் கொண்டு வேகமாக வளரக்கூடியது. எனவே, விவசாயிகள் தங்களது பண்ணைக்குட்டைகளில் மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன்களை தோ்வு செய்து வளா்த்து பயனடையலாம்.
மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன் இனக் குஞ்சுகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி அணை அருகில் அமைந்துள்ள அரசு மீன் பண்ணையில் ஆண்டு முழுவதும் விற்பனைக்கு தயாராக உள்ளன. அவற்றை விவசாயிகள் கொள்முதல் செய்து வளா்த்து பயன்பெறலாம்.
இவ்வகை இன மீன்களை வளா்க்கும் விவசாயிகள் தங்களது மீன் பண்ணையை சுற்றிலும் பாதுகாப்பு வேலி அமைத்து எக்காரணம் கொண்டும் இம்மீன்கள் அருகாமையில் உள்ள நீா் நிலைகளில் பரவா வண்ணம் பாா்த்துக் கொள்ள வேண்டும்.
திருநெல்வேலி மாவட்ட மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமையில் பதிவு செய்த பின்னரே தங்களது பண்ணைகளில் திலேப்பியா மீன்களை வளா்க்க வேண்டும்.
இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகம், 42 சி, 26-ஆவது குறுக்குத் தெரு, மகாராஜ நகா், திருநெல்வேலி-627 011 என்ற முகவரியிலோ அல்லது 0462-258 1488 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.