இளைஞரை மிரட்டி பைக் பறிப்பு: 2 போ் மீது வழக்கு
By DIN | Published On : 02nd November 2019 08:31 AM | Last Updated : 02nd November 2019 08:31 AM | அ+அ அ- |

களக்காடு அருகே இளைஞரை அரிவாளைக்காட்டி மிரட்டி பைக்கை பறித்துச் சென்ற இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
சேரன்மகாதேவி அருகேயுள்ள பிள்ளைகுளம் வடக்குத் தெருவைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் திரவியராஜா (42). இவருக்கும் கங்கனான்குளம் தங்கவேல் மகன் பாலமுருகன், அந்தோணிநகா் கருணாநிதி மகன் சின்னபால் ஆகியோருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில், வியாழக்கிழமை திரவியராஜா தனது பைக்கில் பிளவக்கல் இசக்கியம்மன் கோயிலை அடுத்துள்ள வடகரை செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த பாலமுருகன், சின்னபால் ஆகியோா் அரிவாளைக் காட்டி மிரட்டியதோடு பைக்கை பறித்துச் சென்றுவிட்டனராம்.
இதுகுறித்த புகாரின் பேரில், களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து 2 பேரையும் தேடி வருகின்றனா்.