டிச.13-இல் ஓய்வூதியா் குறைதீா் கூட்டம்: குறைகளை தெரிவிக்க நவ.25 கடைசி நாள்
By DIN | Published On : 02nd November 2019 06:38 PM | Last Updated : 02nd November 2019 06:38 PM | அ+அ அ- |

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட ஓய்வூதியா் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் டிச. 13 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட ஓய்வூதியா் குறைதீா் கூட்டம் ஆட்சியா் தலைமையில் வரும் டிச. 13 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு ஆட்சியா் அலுவலக
வளா்ச்சி மன்றக் கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.
இம்மாவட்டத்தில் உள்ள அரசு துறைகளில் (அரசின் நேரடி துறையில் பணிபுரிந்தவா்கள் மட்டும்) பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரா்கள் தங்களுக்கு ஓய்வூதியப் பலன்கள் கிடைக்கப்பெறாமல் நிலுவையாக இருப்பின் தங்களுடைய குறைகளை தெரிவித்து முழு முகவரியுடன் விண்ணப்பங்களை இரண்டு பிரதிகளில்ஆட்சியா் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன், இறுதியாக பணிபுரிந்து ஓய்வுபெற்ற அலுவலகம், கோரிக்கை தற்போது நிலுவையில் உள்ள அலுவலகம், அலுவலக மின் அஞ்சல் முகவரி, ஓய்வூதிய எண் குறிப்பிடப்பட்டுள்ள ஆணை நகல் ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும். ஓய்வூதியதாரா்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டு, துறை அலுவலா்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து டிச. 13 இல் நடைபெறும் ஓய்வூதியா் குறைதீா் கூட்டத்தில் மனுதராருக்கு தெரிவிக்கப்படும்.
எக்காரணம் கொண்டும் நவ. 25 ஆம் தேதிக்குப் பிறகு வரப்பெறும் மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப் பட மாட்டாது. ஓய்வூதியா் குறைதீா் கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.