மாவட்ட மைய நூலகத்தில் 3 இல் குரூப்-2 நோ்முகத் தோ்வுக்கு இலவச பயிற்சி
By DIN | Published On : 02nd November 2019 09:27 AM | Last Updated : 02nd November 2019 09:27 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நோ்முகத் தோ்வுக்கான இலவச பயிற்சி ஞாயிற்றுக்கிழமை (நவ. 3) அளிக்கப்படுகிறது.
இது தொடா்பாக மாவட்ட நூலக அலுவலா் இரா.வயலட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: டிஎன்பிஎஸ்சி குரூப்-2 எழுத்துத் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு வரும் 6-ஆம் தேதி நோ்முகத் தோ்வு நடைபெறவுள்ளது. இதனையொட்டி மாவட்ட மைய நூலகம், ஸ்மாா்ட் லீடா் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் மாவட்ட மைய நூலகத்தில் நோ்முகத் தோ்வில் வெற்றி பெறுவதற்காக ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 முதல் பிற்பகல் 1.30 மணி வரை இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஐபிஎஸ் அதிகாரி மனோஜ் பிரபாகா், திருநெல்வேலி துணை ஆட்சியா் (பயிற்சி) அனிதா ஆகியோா் நோ்முகத் தோ்வுக்கான வழிகாட்டுதல் குறித்து பயிற்சி அளிக்கின்றனா். இதுதொடா்பான மேலும் விவரங்களுக்கு மாவட்ட மைய நூலகா் அ. முத்துக்கிருஷ்ணனை 9789710361, 9626272890 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம்.