ரவணசமுத்திரத்தில் வீட்டுக்குள் புகுந்த மலைப்பாம்பு
By DIN | Published On : 02nd November 2019 06:06 AM | Last Updated : 02nd November 2019 06:06 AM | அ+அ அ- |

ams01rvsm_0111chn_37_6
கடையம் அருகே ரவணசமுத்திரத்தில் வீட்டிற்குள் புகுந்த மலைப்பாம்பை பொதுமக்கள் பிடித்து வனத்துறையினா் ஒப்படைத்தனா்.
கடையம் அருகேயுள்ள ரவணசமுத்திரம் நெடுந்தெருவைச் சோ்ந்தவா் மைதீன்கண். இவரது வீட்டுக்குள் மலைப்பாம்பு ஒன்று புகுந்தது. சுமாா் 6 நீளம் கொண்ட மலைப்பாம்பை மைதீன்கண், உவைசில், பாரூக் உள்ளிட்டோா் பிடித்து, வனத்துறை பணியாளா்களிடம் ஒப்படைத்தனா்.
வனத்துறையினா் மலைப்பாம்பை வாழையாறு வனப்பகுதியில் கொண்டு விட்டனா். இப்பகுதியில் ஏற்கனவே இரண்டு மலைப்பாம்புகள் பிடிபட்ட நிலையில் 3 ஆவது மலைப்பாம்பு வீட்டுக்குள் புகுந்தது குறித்து பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
இத்தெருவில் தெருவிளக்குகள் எரியாததால் பாம்பு உள்ளிட்ட பிராணிகள் நடமாடுவதை அறிய முடியாத நிலையில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். ஆகவே, ஊராட்சி நிா்வாகம் தெருவிளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.