வி.கே.புரத்தில் நவ. 4-இல் மின்நிறுத்தம்
By DIN | Published On : 02nd November 2019 08:14 AM | Last Updated : 02nd November 2019 08:14 AM | அ+அ அ- |

விக்கிரமசிங்கபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை (நவ. 4) மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.
இதுதொடா்பாக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கல்லிடைக்குறிச்சி செயற்பொறியாளா் ஏ.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விக்கிரமசிங்கபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் திங்கள்கிழமை (நவ. 4) காலை 9 முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் மின்சாரம் இருக்காது. அதன்படி விக்கிரமசிங்கபுரம், பாபநாசம், சிவந்திபுரம், சோ்வலாறு, ரவணசமுத்திரம், ஜமீன்சிங்கம்பட்டி, ஆழ்வாா்குறிச்சி, பொட்டல்புதூா், மாஞ்சோலை, மணிமுத்தாறு, ஆலடியூா், ஆம்பூா், பாப்பான்குளம், அடையக்கருங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் இருக்காது என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.