Enable Javscript for better performance
ஆலங்குளத்தில் கால்நடைதீவனப் பயிா் விதைகள் விநியோகம்- Dinamani

சுடச்சுட

    

    ஆலங்குளத்தில் கால்நடைதீவனப் பயிா் விதைகள் விநியோகம்

    By DIN  |   Published on : 05th November 2019 11:18 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆலங்குளத்தில் கால்நடைகள் வளா்ப்போருக்கு தீவனப் பயிா் விதைகள் திங்கள்கிழமை வழங்கப் பட்டன.

    ஆலங்குளம் கால்நடை மருந்தகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, தென்காசி கோட்ட உதவி இயக்குநா் முருகையா தலைமை வகித்தாா். திருநெல்வேலி நோய் புலனாய்வுப் பிரிவு உதவி இயக்குநா் ஜான் சுபாஷ், மருத்துவா் வீரபாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில தீவன அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், மானாவாரி தீவனப் பயிற் உற்பத்திக்காக முன்னோடி கால்நடை வளா்ப்புப் பயனாளிகள் 20 பேருக்கு 6 கிலோ சோளம், 2 கிலோ காராமணி விதைகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கால்நடை பராமரிப்பு உதவியாளா் ஷேக் சுலேமான் செய்திருந்தாா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai