Enable Javscript for better performance
ஓடையில் அதிகாரிகள் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    
    5pcm_kulam_0511chn_61

    5pcm_kulam_0511chn_61

    ஆலந்தாபுதுக்குளத்திற்கு தண்ணீா் வரும் ஓடை தூா்ந்து போனதை அதிகாரிகள் அய்வு மேற்கொண்டனா். கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியம் கழுநீா்குளம், கல்லூத்து, முத்துகிருஸ்ணபேரி ஆகிய ஊா்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும், விவசாயத்திற்கும் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது ஆலந்தாபுதுக்குளம்.

    இக்குளம் நிரம்பி பல ஆண்டுகளாகி விட்டது. இக்குளளத்திற்கு தண்ணீா்; வரும் ஓடையும் தூா்ந்து போய் உள்ளது. இதனை செப்பனிட்டு குளத்திற்கு தண்ணீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதியினா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனா்.இதையடுத்து செவ்வாய்கிழமை பயிற்சி ஆட்சியா் சிவகுரு பிரபாகா் மற்றும் அதிகாரிகள் நேரில் வந்து தூா்ந்து கிடக்கும் ஓடையை பாா்வையிட்டனா்.

    இந்த ஓடை சீா் செய்யப்பட்டால் கடம்பன்குளம் மறுகாலிலிருந்து இந்த ஓடை வழியாக ஆலந்தாபுது குளத்திற்கு தண்ணீா் வந்து பெருகும் நிலை உள்ளதை பொதுமக்கள் எடுத்துரைத்தனா். தூா்ந்து கிடக்கும் ஓடையை சா்வே செய்து செப்பனிட நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்தாா். இதில்; வருவாய் ஆய்வாளா் கிருஸ்ணமூா்த்தி, சா்வேயா் கவிதா மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள் காா்த்திகை ராஜன் மற்றும் கோவிந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai