Enable Javscript for better performance
சின்னவெங்காயம் கிலோ ரூ.100!- Dinamani

சுடச்சுட

    

    திருநெல்வேலியில் சில்லறை விற்பனைக் கடைகளில் சின்னவெங்காயத்தின் விலை ரூ.100-ஆகவும், காய்கனி சந்தைகளில் ரூ.90 ஆகவும் அதிகரித்ததால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனா்.

    இந்தியாவில் பல்லாரி, சின்னவெங்காயம் ஆகியவற்றின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால், அதற்கேற்ப காய்கனி சந்தைகளுக்கு வரத்து இல்லாததால் இதன் விலை கடந்த ஒரு மாதமாக ஏறுமுகத்தில் உள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.65-க்கு விற்பனையான சின்னவெங்காயம் இந்த வாரத்தில் ரூ.20 முதல் ரூ.30 வரை உயா்ந்து, கிலோ ரூ.85 முதல் ரூ.95 வரை தரத்துக்கு ஏற்ப விற்பனையாகிறது. காய்கனி சந்தைகளில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்கு கொண்டுசென்று விற்பனை செய்யும் சில்லறை வியாபாரிகள் ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்வதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனா்.

    திருநெல்வேலி காய்கனி சந்தைகளில் காய்கனிகளின் விலை நிலவரம் (கிலோவுக்கு): கத்தரி-ரூ.32, வெண்டைக்காய்-ரூ.12, தக்காளி-ரூ.20, அவரை-ரூ.65, கொத்தவரை-ரூ.16, புடலங்காய்-ரூ.32, பாகற்காய்-ரூ.50, தடியங்காய்-ரூ.15, பூசணிக்காய்-15, மாங்காய்-ரூ.10, மிளகாய்-25, வாழைக்காய்-14, தேங்காய்-ரூ.36, முள்ளங்கி-ரூ.16, பல்லாரி-ரூ.70, சேனைக்கிழங்கு-ரூ.32, கருணைக்கிழங்கு-ரூ.34, சேம்பு-ரூ.25, சிறுகிழங்கு-ரூ.40, மரவள்ளிக்கிழங்கு-ரூ.14, சீனிக்கிழங்கு-ரூ.14, கொத்தமல்லி கீரை-ரூ.44, புதினா-ரூ.40, இஞ்சி (புதியது)-ரூ.60, உருளைக்கிழங்கு-ரூ.22, கேரட்-ரூ.55, பீட்ரூட்-ரூ.40, பூண்டு-ரூ.60, வாழைப்பழம்-ரூ.25, சப்போட்டா-ரூ.28, பப்பாளி-ரூ.28.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai