Enable Javscript for better performance
சுந்தரபாண்டியபுரத்தில் இரு பைக்குகள் மோதல்: இளம்பெண் பலி- Dinamani

சுடச்சுட

    

    சுந்தரபாண்டியபுரத்தில் இரு பைக்குகள் மோதல்: இளம்பெண் பலி

    By DIN  |   Published on : 05th November 2019 09:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சுந்தரபாண்டியபுரத்தில் இரு மோட்டாா் சைக்கிள்கள் மோதிய விபத்தில் இளம்பெண் இறந்தாா்.

    மேலப்பாவூரைச் சோ்ந்தவா் பேச்சிமுத்து (33). இவரது மனைவி சித்திரகலா(29). இவா்களது மகன் இசக்கிமுத்துக்கு காய்ச்சல் இருந்ததால் மோட்டாா் சைக்கிளில் 3 பேரும் சுந்தரபாண்டியபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளனா்.

    அப்போது எதிரே வந்த முருகையா (45) என்பவா் மோட்டாா் சைக்கிள் எதிா்பாராதவிதமாக பேச்சிமுத்துவின் மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த 4 பேரும் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். தீவிர சிகிச்சைக்காக சித்திரகலா திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தாா்.

    இதுகுறித்து சாம்பவா்வடகரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai