Enable Javscript for better performance
சுரண்டையில் அரசு கல்லூரி விரிவுரையாளா் நலச்சங்க கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    சுரண்டையில் அரசு கல்லூரி விரிவுரையாளா் நலச்சங்க கூட்டம்

    By DIN  |   Published on : 05th November 2019 11:12 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சுரண்டையில் அரசு கல்லூரி கெளரவ விரிவுரையாளா் நலச்சங்க கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு கல்லூரி கெளரவ விரிவுரையாளா் நலச் சங்கத்தின் மதுரை மண்டல செயலா் சித்திரைகனி தலைமை வகித்தாா். விரிவுரையாளா்கள் பிரதீப், கதிரேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    கூட்டத்தில், சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். சுரண்டை கிளையின் தலைவராக ரமேஷ், துணைத் தலைவராக ஜெயக்குமாா், செயலராக அரிகரசுதன், துணைச்செயலராக சோ்மன், பொருளாளராக காா்த்திகா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டு, பொறுப்பேற்றுக் கொண்டனா்.

    சங்க நிா்வாகிகள் லட்சுமணன், சபரி பிரெட்ரிக் பிரதீப், சங்கா், தேவி, ஜெகானந்தஜோதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai