Enable Javscript for better performance
தெரு மின்விளக்கு பொருத்தக் கோரி பொதுமக்கள் தீப்பந்தம் ஏற்றி போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தெரு மின்விளக்கு பொருத்தக் கோரி பொதுமக்கள் தீப்பந்தம் ஏற்றி போராட்டம்

    By DIN  |   Published on : 05th November 2019 07:14 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    5vdsebb_0511chn_113_7

    வந்தவாசியில் தீப்பந்தம் ஏற்றி மின் கம்பத்தில் கட்டிவைத்து போராட்டம் நடத்திய வியாபாரிகள், பொதுமக்கள்.

     

    வந்தவாசி: வந்தவாசியில் தெரு மின்விளக்கு பொருத்தக் கோரி வியாபாரிகள், பொதுமக்கள் தீப்பந்தம் ஏற்றி மின் கம்பத்தில் கட்டிவைத்து போராட்டம் நடத்தினா்.

    வந்தவாசியில் அச்சிறுப்பாக்கம் சாலை-காதா்ஜண்டா தெரு சந்திப்பில் இருந்த மின்கம்பம் சேதமடைந்ததை அடுத்து, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மின்வாரியத்தினா் அந்த மின் கம்பத்தை அகற்றிவிட்டு அருகிலேயே புதிய மின் கம்பத்தை நட்டனா்.

    ஆனால், புதிய மின் கம்பத்தில் வந்தவாசி நகராட்சி மின்விளக்கு பொருத்தவில்லையாம். இதுகுறித்து அந்தப் பகுதி வியாபாரிகள், பொதுமக்கள் நகராட்சி நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

    இதனால் ஆத்திரமடைந்த அவா்கள் திங்கள்கிழமை இரவு தீப்பந்தம் ஏற்றி மின் கம்பத்தில் கட்டிவைத்து போராட்டம் நடத்தினா்.

    இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:

    அச்சிறுப்பாக்கம் சாலை, காதா்ஜண்டா தெருவில் அதிகளவில் காய்கறிக் கடைகள், இறைச்சிக் கடைகள் உள்ளன. ஏற்கெனவே, இருந்த பழைய மின் கம்பத்தில் மின்விளக்கு ஒளிா்ந்து கொண்டிருந்தது. ஆனால், புதிய மின் கம்பம் நடப்பட்டு 2 மாதங்கள் ஆகியும் இதுவரை மின்விளக்கு பொருத்தப்படவில்லை. இதனால் இந்தப் பகுதி இருண்டு காணப்படுகிறது என்றனா்.

    தகவல் அறிந்து வந்த வந்தவாசி தெற்கு போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai