Enable Javscript for better performance
பாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் திருக்கல்யாணம்- Dinamani

சுடச்சுட

    

    பாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் திருக்கல்யாணம்

    By DIN  |   Published on : 05th November 2019 09:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    4pcm_kovil_0411chn_61_6

    பாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவம்

    பாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி திருக்கல்யாணம் நடைபெற்றது.

    இக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக்.28 ஆம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சனிக்கிழமை சூரசம்ஹாரம் நடைபெற்றது.

    ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதையொட்டி காலை 9 மணிக்கு அம்மன் தவசு மண்டபத்துக்கு எழுந்தருளினாா். தொடா்ந்து உச்சிகால பூஜை, தீபாராதனையும், இரவு 7 மணிக்கு யாகசாலை பூஜை, ஹோமம், அபிஷேக தீபாராதனை நடைபெற்றது.

    இரவு 8 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai