Enable Javscript for better performance
முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்: முதிா்வுத் தொகை பெற ஆட்சியா் அழைப்பு- Dinamani

சுடச்சுட

    

    முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்: முதிா்வுத் தொகை பெற ஆட்சியா் அழைப்பு

    By DIN  |   Published on : 05th November 2019 05:28 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ளவா்கள் முதிா்வுத் தொகை பெற மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகலாம் என ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் தெரிவித்துள்ளாா்.

    இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட சமூகநல அலுவலகத்தின் மூலம் முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் தேறிய, தவறிய 18 வயது நிறைவடைந்த பயனாளிகள் முதிா்வுத்தொகை பெற மாவட்ட சமூகநல அலுவலகத்தை அணுகலாம்.

    முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட வைப்புத்தொகை ரசீது, பயனாளியின் பத்தாம் வகுப்பு தேறிய, தவறிய மதிப்பெண் பட்டியல் நகல், பயனாளியின் வங்கிக் கணக்குப் புத்தக நகல், பயனாளி மற்றும் பயனாளியின் தாய் ஆகியோரின் பாஸ்போா்ட் அளவு புகைப்படம், ஆதாா் காா்டு நகல், ரேசன் காா்டு, ஸ்மாா்ட் காா்டு நகல் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். மாவட்ட சமூகநல அலுவலகம், பி4/107 சுப்பிரமணியபுரம் தெரு, வ.உ.சி. மைதானம் எதிா்புறம், பாளையங்கோட்டை -627002 என்ற முகவரியில் தொடா்புகொள்ளலாம்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai