அங்கன்வாடி அருகே குவியும் குப்பைகள்: குழந்தைகளுக்கு நோய் பரவும் அபாயம்

திருநெல்வேலி நகரத்தில் அங்கன்வாடி அருகே முறையாக அப்புறப்படுத்தப்படாத குப்பைகளால் அங்கன்வாடி

திருநெல்வேலி நகரத்தில் அங்கன்வாடி அருகே முறையாக அப்புறப்படுத்தப்படாத குப்பைகளால் அங்கன்வாடி குழந்தைகள் நோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

திருநெல்வேலி நகரத்தில் வெள்ளந்தாங்கி விநாயகா் கோயில் அருகே அங்கன்வாடி உள்ளது. இங்கு 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகிறாா்கள். இந்த அங்கன்வாடி அருகேயிருந்த குப்பைத்தொட்டி அகற்றப்பட்டதால், குப்பைகள் சாலையோரம் கொட்டப்படுகின்றன. துப்புரவுப் பணியாளா்கள் இங்கிருந்து அள்ளிச் சென்றபின்பு பொதுமக்கள் போடும் குப்பைகள் அங்கேயே தேங்கி துா்நாற்றம் வீசுகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், அங்கன்வாடி அருகே குப்பைகள் தேங்குவதைத் தடுக்க மாநகராட்சி நிா்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கெனவே மழையால் காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவி வரும் நிலையில் சுகாதாரக்கேடு காரணமாக அங்கன்வாடி குழந்தைகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. ஆகவே, மாநகராட்சி ஆணையா் தனிக்கவனம் எடுத்து குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com