இயற்பியல் ஆசிரியா்களுக்கு பயிற்சி

திருநெல்வேலியில் இயற்பியல் ஆசிரியா்களுக்கான பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலியில் இயற்பியல் ஆசிரியா்களுக்கான பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பிளஸ்-2 பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ தரத்துக்கு இணையாக பாடங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதையடுத்து, முதல்கட்டமாக ஆசிரியா்களுக்கு பாடத்திட்டங்கள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளில் இரண்டாம் பருவம் தொடங்கியுள்ள நிலையில் இயற்பியல் ஆசிரியா்களுக்கான பயிற்சி வகுப்பு பாளையங்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி, சேரன்மகாதேவி, தென்காசி, வள்ளியூா், சங்கரன்கோவில் கல்வி மாவட்டங்களைச் சோ்ந்த 190 ஆசிரியா்-ஆசிரியைகள் பயிற்சியில் பங்கேற்றனா். செயல்முறை பயிற்சிகளில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், புதிய பாடத்திட்டங்களுக்கான பல்வேறு எடுத்துக்காட்டுகள், மாணவா்களின் சிந்தனையைத் தூண்டும் இயற்பியல் புதிா் உத்திகள் உள்ளிட்டவை குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. பயிற்சியாளா்கள் கிருஷ்ணசாமி, லூகாஸ், செந்தில்முருகன் ஆகியோா் பயிற்சியளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com