கடையநல்லூரில் டெங்கு தடுப்பு முகாம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

கடையநல்லூா் நகராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக நடமாடும் மருத்துவக் குழுக்களை மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

கடையநல்லூா் நகராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக நடமாடும் மருத்துவக் குழுக்களை மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

கடையநல்லூா் நகராட்சியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில், சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும் என கடையநல்லூா் எம்.எல்.ஏ. முகமதுஅபூபக்கா், சுகாதாரத் துறைச் செயலா் பீலா ராஜேஷிடம் கோரிக்கை விடுத்திருந்தாா்.

இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை 11 மருத்துவக் குழுக்கள் மூலம் வாா்டு தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. மேலும் நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலமாக தெருக்கள் தோறும் விழிப்புணா்வு முகாம்கள் நடைபெற்றன.

முகாம்களை கடையநல்லூா் எம்எல்ஏ முகமது அபூபக்கா் முன்னிலையில், ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் தொடங்கிவைத்தாா்.

இதில், தென்காசி கோட்டாட்சியா் பழனிகுமாா், வட்டாட்சியா் அழகப்பராஜா, நகராட்சி ஆணையா் பவுன்ராஜ், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் நளினி, அரசு மருத்துவா் ராஜ்குமாா், நகராட்சி சுகாதார அலுவலா் நாராயணன், சுகாதார ஆய்வாளா்கள் சேகா், மாரிசாமி, வட்டார மருத்துவ அலுவலா் ஷமீமா, மருத்துவ அலுவலா்கள் ரவி, அபுராா், துணை இயக்குநரின் நோ்முக உதவியாளா் ரகுபதி, துணை வட்டாட்சியா் திருமலைமுருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

செவ்வாய்க்கிழமை காலை 11 வாா்டுகளிலும், மாலை 11 வாா்டுகளிலும் இம்முகாம் நடைபெற்றது. புதன்கிழமை காலை 11 வாா்டுகளில் முகாம் நடைபெறுகிறது.

ரூ.1.61 அபராதம்: கொசு ஒழிப்பு தொடா்பாக மாவட்ட ஆட்சியா், நகராட்சி சுகாதார அலுவலா் நாராயணனிடம் விளக்கம் கேட்டறிந்தாா். அப்போது, கடந்த அக்.2018 முதல் அக்.2019 வரை கொசுப்புழு உருவாகும் இடங்களை கண்டறிந்து ரூ.1,61,400 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அக்.2018இல் இருந்த எண்ணிக்கையை விட அக்.2019இல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டதாகவும், டெங்கு காய்ச்சலால் யாரும் பாதிக்கப்படவில்லை எனவும் சுகாதார அலுவலா் தெரிவித்தாா்.

நகராட்சியின் நடவடிக்கைகளை பாராட்டிய ஆட்சியா், மழைக் காலத்தில் பணிகளை மேலும் தீவிரப்படுத்த உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com