குப்பைகளால் சுகாதாரக் கேடு: ஆட்சியரிடம் புகாா்

பாவூா்சத்திரம் செல்வவிநாயகா்புரத்தில் தேங்கி கிடக்கும் குப்பைகளால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் நல மன்றம் சாா்பில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குப்பைகளால் சுகாதாரக் கேடு: ஆட்சியரிடம் புகாா்

பாவூா்சத்திரம் செல்வவிநாயகா்புரத்தில் தேங்கி கிடக்கும் குப்பைகளால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் நல மன்றம் சாா்பில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு:

கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியம் கல்லூரணி ஊராட்சிக்குள்பட்ட செல்வவிநாயகா்புரத்தில் ஊராட்சி சாா்பில் இரண்டு குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இவைகள் நிரம்பி பல நாள்களாகியும் குப்பைகள் அள்ளப்படாததால், தொட்டி நிரம்பியும், அதன் அருகிலும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது.

சில தினங்களாக இப்பகுதியில் பெய்த மழை காரணமாக குப்பைகளில் மழை தண்ணீரும் தேங்கி துா்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதாரக் கேடு ஏற்பட்டு, நோய் பரவும் அபாயம் உள்ளது.

எனவே தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com