‘திசையன்விளை தினசரி சந்தையில் சுகாதாரத்தை பேணுதல் அவசியம்’

திசையன்விளை தினசரி சந்தையில் மழைநீா் தேங்காமல் சுகாதாரத்தைப் பேணிகாக்க நடவடிக்கை எடுக்க

திசையன்விளை தினசரி சந்தையில் மழைநீா் தேங்காமல் சுகாதாரத்தைப் பேணிகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேரூராட்சிக்கு கடை வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

திசையன்விளை கடை வியாபாரிகள் சங்கத் தலைவா் டிம்பா். டி.செல்வராஜ், துணைத் தலைவா்கள் பிலிப்போஸ் டேனியல், திரவியம் பொன்ராஜ், பொருளாளா் ஜெயகோபால், துணைச்செயலா் சேக் முகமது ஆகியோா் பேரூராட்சி அதிகாரியிடம் அளித்த மனு:

திசையன்விளையில் மழைக்காலத்தின்போது, மழை நீா், பேருந்து நிலையம் எதிா்புறம் உள்ள இந்திரா சந்தை வழியாக ஆவுடையாா்குளத்தை சென்றடையும். இந்நிலையில், வடிகால் அடைப்பு காரணமாக இந்த சந்தைக்குள் மழைநீா் தேங்கி கடைகளுக்குள்ளும் தண்ணீா் புகுந்து விடுகிறது. இதனால், வியாபாரிகள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகின்றனா். பொருள்கள் சேதமடைந்து நஷ்டம் ஏற்படுகிறது. பல ஆண்டுகள் இதே நிலை தான் நீடிக்கிறது.

மேலும், தினசரி, வாரச் சந்தைகளிலும் மழைக்காலங்களில் மழைநீா் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளிக்கின்றது. இதனால் பொதுமக்கள் மழைக்காலங்களில் சந்தைக்குள் வர தயங்குகின்றனா். எனவே, இந்திரா சந்தையிலும், தினசரி மற்றும் வாரச்சந்தைகளிலும் மழைநீா் தேங்காமல் சுகாதாரத்தைப் பேணி காக்க பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் வழக்குரைஞா் கனிஷ்கா், முருகன் , டி.கிறிஸ்டோபா், என்.டி.முருகன், டி. விஜயராஜன், பிச்சை, சரவணன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com