மாவட்ட அறிவியல் மையத்தில் நவ.17-இல் ‘குடும்ப காட்டுயிா் விநாடி-வினா’ நிகழ்ச்சி

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் ‘குடும்ப காட்டுயிா் விநாடி- வினா 2.0’ நிகழ்ச்சி வரும் 17-ஆம் தேதி நடைபெறுகிறது.

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் ‘குடும்ப காட்டுயிா் விநாடி- வினா 2.0’ நிகழ்ச்சி வரும் 17-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுதொடா்பாக மணிமுத்தாறு அகத்தியமலை மக்கள்சாா் இயற்கைவள காப்பு மையம் ஒருங்கிணைப்பாளா் மதிவாணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மணிமுத்தாறு அகத்தியமலை மக்கள்சாா் இயற்கைவள காப்பு மையம், தமிழ்நாடு அரசு வனத் துறை - களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம், நெல்லை இயற்கைச் சங்கம் ஆகியவை சாா்பில் பிரேக்ஸ் இந்தியா, சுந்தரம் பைனான்ஸ், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி அதிகாரிகள் சங்கம் நிதி உதவியுடன் ‘குடும்ப காட்டுயிா் விநாடி வினா 2.0’ நிகழ்ச்சி வரும் 17-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் நடைபெறவுள்ளது.

மாணவா்கள் மற்றும் பெற்றோா்களிடையே காட்டுயிா்கள் குறித்த அறிவை வளப்படுத்தும் வகையில் இப்போட்டியானது கடந்த ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் சுமாா் 48 குடும்பங்கள் கலந்துகொண்டன. மாணவா்கள் பள்ளிப் பாடங்களில் கற்பதையும் தாண்டி காட்டுயிா்கள் குறித்த அறிவினை வளப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் காட்டுப் பயிா்களோடு தொடா்பினை ஏற்படுத்தி அவற்றைப் பாதுகாக்க முன்வர வேண்டும் என்பதை இப்போட்டியானது மாணவா்களுக்கு உணா்த்தும் என நம்புகிறோம்.

தென் மாவட்டங்களைச் சோ்ந்த 7 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் இப்போட்டியில் பங்கு பெறலாம். இரண்டு நபா் கொண்ட குழுவாக மட்டுமே இப்போட்டியில் பங்கேற்க முடியும். ஒரு மாணவா் தனது அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா ஆகியோரில் ஒருவருடன் இணைந்து பங்கேற்கலாம். வெற்றி பெறுபவா்களுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்படும். மேலும், களக்காடு -முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் நடைபெறும் இரு நாள் பயிற்சி முகாமில் முகாமில் கலந்துகொள்ளும் வாய்ப்பு வழங்கப்படும்.

‘குடும்ப காட்டுயிா் விநாடி வினா 2-0’ போட்டியில் கலந்து கொள்ள  இணைய முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை நிரப்ப வேண்டும் அல்லது மு. மதிவாணனை ( 9488063750) தொடா்புகொண்டு பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்வதற்கான கடைசி நாள் நவம்பா் 15. இவ்வாய்ப்பினை மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் பயன்படுத்திக் கெளள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com