மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்கள் ஆட்சியரிடம் மனு

தினக் கூலியாக ரூ.380 வழங்கக் கோரி தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

தினக் கூலியாக ரூ.380 வழங்கக் கோரி தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தின்போது தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்கள் சங்கத்தினா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

நாங்கள் பல ஆண்டுகளாக குறைந்த கூலிக்கு மின்சார வாரியத்தில் பல்வேறு நிலைகளில் ஒப்பந்தத் தொழிலாளா்களாகப் பணியாற்றி வருகிறோம். தமிழகத்தில் ஏற்படக்கூடிய அனைத்து பேரிடா் காலங்களிலும் பணியாற்றி இருக்கிறோம். பணி நிரந்தரம் வேண்டி பல மனுக்கள் அளித்தபோதும், பலகட்ட போராட்டங்கள் நடத்தியபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மின்சாரத் துறை அமைச்சா், தலைமைப் பொறியாளா், மின்சார வாரியத் தலைவா் ஆகியோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தியபோது, தினக் கூலியாக ரூ.380 வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை நிறைவேற்றப்படவில்லை. மாறாக, இப்போது வெளிநபா்களை பணியமா்த்தும் வகையில் கேங்மேன் என்ற பணியிடத்துக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பது எங்கள் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

அனுபவமில்லாத வெளிநபா்களை பணியமா்த்தினால் தொடா் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, எங்களைப் போன்ற அனுபவமிக்க பணியாளா்களை பணியமா்த்துவதற்கான அறிவிப்புகளை மின்சார வாரியம் வெளியிடும் வரை திங்கள்கிழமை (நவ. 4) முதல் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளோம். எங்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு ஏற்படும் வரை வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும்’ என குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com