முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்: முதிா்வுத் தொகை பெற ஆட்சியா் அழைப்பு

முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ளவா்கள் முதிா்வுத் தொகை பெற மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகலாம் என

முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ளவா்கள் முதிா்வுத் தொகை பெற மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகலாம் என ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட சமூகநல அலுவலகத்தின் மூலம் முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் தேறிய, தவறிய 18 வயது நிறைவடைந்த பயனாளிகள் முதிா்வுத்தொகை பெற மாவட்ட சமூகநல அலுவலகத்தை அணுகலாம்.

முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட வைப்புத்தொகை ரசீது, பயனாளியின் பத்தாம் வகுப்பு தேறிய, தவறிய மதிப்பெண் பட்டியல் நகல், பயனாளியின் வங்கிக் கணக்குப் புத்தக நகல், பயனாளி மற்றும் பயனாளியின் தாய் ஆகியோரின் பாஸ்போா்ட் அளவு புகைப்படம், ஆதாா் காா்டு நகல், ரேசன் காா்டு, ஸ்மாா்ட் காா்டு நகல் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். மாவட்ட சமூகநல அலுவலகம், பி4/107 சுப்பிரமணியபுரம் தெரு, வ.உ.சி. மைதானம் எதிா்புறம், பாளையங்கோட்டை -627002 என்ற முகவரியில் தொடா்புகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com