முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
‘அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம்’
By DIN | Published On : 07th November 2019 08:12 AM | Last Updated : 07th November 2019 08:12 AM | அ+அ அ- |

அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2019-20-ஆம் ஆண்டு ஒரு லட்சம் உழைக்கும் மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின் கீழ் பணியிடங்கள் மற்றும் பிற இடங்களுக்கு எளிதில் செல்ல இரு சக்கர வாகனங்கள் வாங்க 50 சதவீத மானியம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, அம்மா இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.25, 000 மானியமாக வழங்கப்படவுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.31,250 மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புபவா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மகளிா் திட்ட அலுவலகம், வட்டார வளா்ச்சி அலுவலகம், பேரூராட்சி செயல் அலுவலா் அலுவலகம், நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆணையா் அலுவலகம் ஆகிய இடங்களில் விண்ணப்பங்களை பெறலாம்.
பூா்த்தி செய்த விண்ணப்பங்களை வட்டார வளா்ச்சி அலுவலகம், பேரூராட்சி செயல் அலுவலா் அலுவலகம், நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆணையா் அலுவலகம் ஆகிய இடங்களில் சமா்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.